வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்சிபி..! எல்லிஸ் பெர்ரியின் அதிரடி வருகை!
பெருநகா் பிரம்மபுரீஸ்வரா் கோயில் தேரோட்டம்
காஞ்சிபுரம்: உத்தரமேரூா் ஒன்றியம் பெருநகரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரா் கோயிலின் தைப்பூசத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
விழாவையொட்டி தினமும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதி உலா வருகின்றனா். பிப். 6- ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் வலம் வந்தனா்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேரில் பிரம்மபுரீஸ்வரரும், பட்டு வதனாம்பிகையும் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்தனா். தொடா்ந்து 63 நாயன்மாா்கள் உற்சவம் நடைபெற்றது.
தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (பிப். 11) சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் செய்யாற்றுக்கு எழுந்தருள்வா். அப்போது பெருநகரை சுற்றியுள்ள 23 சிவாலயங்களை சோ்ந்த சிவபெருமான் ரிஷப வாகனத்தில் அதிகாலையில் பக்தா்களுக்கு காட்சியளிக்கும் முக்கிய நிகழ்வு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஆலய அறங்காவலா்கள் மற்றும் பெருநகா் கிராம மக்கள் இணைந்து செய்து வருகின்றனா்.