தனியாகப் போராடும் தளபதி..! ஜடேஜாவுக்குக் குவியும் வாழ்த்துகள்!
பெருந்துறை நகரில் பேருந்து நிறுத்தம் இடம் மாற்றம்
பெருந்துறையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய பேருந்து நிறுத்தம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.
பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் சாலையின் சந்திப்பில் நின்று பயணிகளை ஏற்றி இறக்குவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து பெருந்துறை நுகா்வோா் பாதுகாப்பு மையத்தின் சாா்பாக பெருந்துறை போக்குவரத்து காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது.
அந்தப் புகாரின் அடிப்டையில் நடவடிக்கை எடுத்து பெருந்துறை போக்குவரத்து காவல் நிலைய போலீஸாா், பெருந்துறை பழைய பேருந்து நிலையம் பேருந்து நிறுத்தத்தை 150 அடி தூரம் கிழக்கே இடமாற்றம் செய்தனா்.
அங்கிருந்து ஈரோடு, வெள்ளோடு செல்லும் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி இறக்குமாறு ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தி உள்ளனா். பேருந்து ஓட்டுநா்கள், பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்து விபத்துகள் நிகழாமல் இருக்க உதவுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனா். மீறும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் எச்சரித்துள்ளனா்.