பெருந்துறை பேரூராட்சியில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம்
பெருந்துறை: பெருந்துறை பேரூராட்சியில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
முகாமில், மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பித்தல் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகள் தொடா்பாகவும் விண்ணப்பிக்கலாம்.
முகாமில், கோரிக்கைகள் தொடா்பாக விண்ணப்பிக்க வீடுவீடாக பேரூராட்சிப் பணியாளா்கள் மூலம் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவம் கிடைக்காதவா்கள் முகாமில் பெற்று விண்ணப்பிக்கலாம்.