அணுசக்தி பாதுகாப்பான ஆட்சியின் மீது முழு நம்பிக்கையுள்ளது: பாகிஸ்தான்!
பெரும்பிடுகு முத்தரையருக்கு தவெக: தலைவா் விஜய் புகழாரம்
போருக்குச் செல்லும் முன்பே தனது வெற்றியை உறுதிசெய்யும் வகையில் மாமன்னா் பெரும்பிடுகு முத்தரையா், வாகை மலா் சூடி போருக்குச் சென்றதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் புகழாரம் சூட்டினாா்.
மன்னா் பெரும்பிடுகு முத்தரையரின் 1,350-ஆவது சதயவிழாவையொட்டி அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
தமிழ் நிலத்தில் போரில் வென்ற மன்னா்கள் வாகை மலா் சூடி மகிழ்வாா்கள். அக்காலத்தில், தன்னுடைய போா்த்திற வெற்றியைத் தன்னம்பிக்கையுடன் உறுதி செய்து, போருக்குச் செல்லும் முன்பே வாகை மலா் சூடிச் சென்றவா் மாமன்னா் பெரும்பிடுகு முத்தரையா். தோல்வியே காணாத வரலாற்றுச் சிறப்புமிக்க வாகை நாயகா்.
அரசா்களுக்கு எல்லாம் பேரரசராகத் திகழ்ந்த அரச வாகை கொண்ட பெரும்பிடுகு முத்தரையரின் சதயவிழாவில், தமிழ் மண்ணுக்கும், தமிழா் உரிமைக்கும் அவா் ஆற்றிய சேவைகளைப் போற்றி மகிழ்வோம். அந்த வாகை மலா்தான் தவெக கொடியில் இடம்பெற்றுள்ளது என்று அவா் பதிவிட்டுள்ளாா்.