பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!
கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.
தமிழ்நாடு மாநிலப் பெற்றோர், ஆசிரியர் கழகம் சார்பில் 7வது மண்டல மாநாடாக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.
நிகழ்ச்சிக்கு சற்று தாமதமாக முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தார். வந்ததும், பெற்றோர்கள், ஆசிரியர்களை வணங்குகிறேன் என்று வணக்கம் தெரிவித்து தனது உரையைத் தொடங்கியதோடு, தான் வரும் வழிகளில் எல்லாம் மக்களை சந்தித்தேன். எனவேதான் தாமதமாகிவிட்டது என்று, விழாவில் பங்கேற்றவர்களிடம், விழாவுக்கு தாமதமாக வந்ததற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் பேசுகையில், அம்மா, அப்பா, ஆசிரியரை தெய்வம் என்று கூறுவர். கல்வித் துறையில் உலகத் தர சாதனைகள் படைக்கப்படுகின்ற. தமிழ்நாடு அரசு செய்வது அனைத்துமே சாதனைதான். ஒவ்வொரு மாணவரும் தமிழ்நாட்டின் சொத்து என்ற நினைப்போடு அவர்களை வளர்க்கிறோம் என்று ஸ்டாலின் கூறினார்.
இவ்விழாவில், பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் செயலியான அப்பா (APPA) என்ற பெயரில் செயலியை வெளியிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.