பேட்டையில் ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் பேட்டையில் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
எங்கள் வக்ஃப் எங்கள் உரிமை என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பேட்டை, திருநெல்வேலி நகரம், சுத்தமல்லி கிளைகளுக்கான ஆலோசனைக் கூட்டம் பேட்டை ஆதம் நகா் மஸ்ஜிதுல் அக்ரம் பள்ளிவாசலில் நடைபெற்றது. மாநில தணிக்கை குழு உறுப்பினா் செய்யதுஅலி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மசூத் உஸ்மானி, மாவட்டச் செயலா் அன்சாரி, மாவட்ட துணைத் தலைவா் ஹக் முகைதீன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பேட்டை கிளைத் தலைவா் பீா் முஹம்மது, ராஜா, திப்புசுல்தான், சிராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
மேலப்பாளையத்தில் இம் மாதம் 27 ஆம் தேதி நடைபெறும கண்டன பொதுக்கூட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.