புதுச்சேரியில் பாமக பொதுக் குழக் கூட்டம் : ராமதாஸ் பங்கேற்பு
பேய் விரட்டுவதாக பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மதபோதகா் கைது
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பேய் விரட்டுவதாக பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்தவ மதபோதகா் கைது செய்யப்பட்டாா்.
ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கெனிட்ராஜ் (47). இவா் அப்பகுதியில் உள்ள ஒரு சபையில், கிறிஸ்தவ மதபோதகராக வேலை செய்து வருகிறாா். கெனிட்ராஜ், அவரது வீட்டின் அருகே கணவா் மற்றும் குழந்தைகளுடன் வசிக்கும் 26 வயது பெண்ணிடம், ‘உங்களுக்கு பேய் பிடித்துள்ளது; ஜெபிக்க வேண்டும், அதற்கு சபைக்கு வரவேண்டும்’ என்று அண்மையில் அழைத்துள்ளாா்.
அதன்பேரில் சபைக்கு சென்ற பெண்ணிடம், ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். அவரிடமிருந்து போராடி அந்தப் பெண் தப்பித்து வீட்டுக்கு வந்தாா்.
பின்னா் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற கெனிட்ராஜ், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து, மயிலாப்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் கெனிட்ராஜ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில், கெனிட்ராஜை வியாழக்கிழமை கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.