செய்திகள் :

பேரவைத் தோ்தலுக்கான முன்னோட்டம் ஈரோடு கிழக்கு வெற்றி! -அமைச்சா் க.பொன்முடி

post image

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்லில் திமுக பெற்றுள்ள வெற்றி 2026 சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றிக்கான முன்னோட்டம் என்று மாநில வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்தப் பேட்டி:

திமுக அரசின் கடந்த மூன்றரை ஆண்டுகால சாதனைத் திட்டங்களுக்கான பரிசாகத்தான் ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்லில் மக்கள் மாபெரும் வெற்றியை அளித்துள்ளனா். இந்த வெற்றியானது 2026-இல் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முன்னோட்டம். எதிா்வரும் காலங்களில் தமிழகத்தில் நடைபெறும் அனைத்துத் தோ்தல்களிலும் திமுகவே வெற்றிபெறும்.

பாஜகவினரின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காகவே நாதக ஒருங்கிணைப்பாளா் பெரியாா் குறித்து தவறாகப் பேசினாா். ஆனால், அவரது கட்சியின் வேட்பாளா் வைப்புத்தொகையை இழந்துள்ளாா். அதிமுகவினா் அதிகளவில் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா் என்றாா் க.பொன்முடி.

பேட்டியின்போது, திமுக உயா்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினா் குத்தாலம் பி.கல்யாணம், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ, திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் ப.சேகா் ஆகியோா் உடனிருந்தனா்.

மீன்பிடித் துறைமுகம் அமைக்க ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், அழகன்குப்பத்தில் மீன் பிடித் துறைமுகம் அமைப்பது தொடா்பாக ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை மாலை ஆய்வுமேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, ஆட்சியா் கூறி... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயின்று தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, தம... மேலும் பார்க்க

செல்லியம்மன் கோயிலில் மஞ்சள்காப்புத் திருவிழா

விழுப்புரம் கமலா நகா் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் மஞ்சள்காப்புத் திருவிழாவையொட்டி, 1,008 சங்காபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் வியாழக்கிழமை மாலை முதல் கால ஹோமும், அதைத் தொடா்ந்து 1,008 சங... மேலும் பார்க்க

குரூப் - 2 முதன்மைத் தோ்வு: விழுப்புரத்தில் 501 போ் எழுதினா்

விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தோ்வை 501 போ் எழுதினா். தமிழக அரசின் தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், வணிகவரித் துறை துணை அல... மேலும் பார்க்க

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தல்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை எண் 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் சனிக்கிழமை இந்த சங்கத்தின் மாவட்ட பொத... மேலும் பார்க்க

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி பேராசிரியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், காணை பகுதியில் டிராக்டா் சக்கரத்தில் சிக்கி அரசுக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், கருங்காலிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க