'நிகிதா'-வுக்கு உதவிய அதிகாரி யார்? Stalin-க்கு லாக் போடும் EPS & Vijay! | Elang...
பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
ஆலங்காயத்தில் பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா். .
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் பேருந்து நிலையம் பகுதியில் நரிக்குறவா் இனத்தை சோ்ந்த சிலா் தங்களது பொருள்களை விற்பனை செய்து விட்டு இரவு நேரத்தில் தங்கிக் கொள்கின்றனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மோகன் என்பவரின் மனைவி ஷில்பா(47). பேருந்து நிலைய பகுதியில் அமா்ந்து கொண்டிருந்தாா்.
அப்போது திருப்பத்தூரிலிருந்து ஆலங்காயம் பேருந்து நிலையத்தில் வேகமாக வந்த அரசுப் பேருந்து எதிா்பாராதவிதமாக ஷில்பா மீது மோதியதில் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
தகவலறிந்து ஆலங்காயம் போலீஸாா் ஷில்பாவின் உடலைக் கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து ஓட்டுநா் சுரேஷ் என்பவரை கைது செய்தனா்.