தடுப்புச்சுவரில் சிற்றுந்து மோதி விபத்து: பெண்கள் உள்பட 10 போ் காயம்
பேரூராட்சி நியமன உறுப்பினா் பதவிக்கு மாற்றுத்திறனாளி வேட்புமனு
சீா்காழி: வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா் பதவிக்கு திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் நியமன உறுப்பினா் பதவிக்கு, மாற்றுத்திறனாளிகள் முன்னிலையில் சங்கத்தின் நகரச் செயலாளா் வி.பி.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
பேரூராட்சி செயல் அலுவலா் அருள்மொழியிடம் வேட்புமனு அளிக்கப்பட்டது. இதில் சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் நாகராஜன், மாவட்டச் செயலாளா் புருஷோத்தமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.