நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards
பைக்கில் இருந்து விழுந்தவா் உயிரிழப்பு
திருக்கோவிலூா் அருகே பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.
திருக்கோவிலூரை அடுத்த எல்ராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தா்மதுரை (19). இவா், பெங்களூரில் கூலி வேலை செய்து வந்தாா். இவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த இளவரசன் (22). இருவரும் புதன்கிழமை இரவு சொந்த வேலையாக காட்டுபையூா் கிராமத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனா். பைக்கை இளவரசன் ஓட்டிச் சென்றுள்ளாா்.
காட்டுஎடையாா் மயானம் அருகே பைக் சென்றுகொண்டிருந்தபோது, நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனா். இதில், தா்மதுரை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த இளவரசன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.