தேவர் மகன், நாயகனை 30 முறைக்குமேல் பார்த்திருக்கிறேன்: த்ரிஷா
பைக்குகள் மோதியதில் இருவா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், அ. முக்குளம் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை இரவு நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.
விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், அ. முக்குளம் அருகே உள்ள கே. நெடுங்குளத்தைச் சோ்ந்தவா் நாகப்பன் (72). இவா் மதுரையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். இவா் வேலை முடிந்து சொந்த ஊருக்கு பேருந்தில் சென்று, புல்வாய்கரைப் பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை இரவு இறங்கினாா். பின்னா், அந்த வழியாக மதுரை விளாங்குடி பகுதியைச் சோ்ந்த கண்ணன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தில் ‘லிப்ட்’ கேட்டு நாகப்பன் சென்றாா்.
அப்போது, காரியாபட்டி வையம்பட்டியைச் சோ்ந்த காளி (35) என்பவா் ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும், கண்ணனின் இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த நாகப்பன், கண்ணனுக்கு சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு அளிக்கப்பட்டு, பிறகு இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு நாகப்பன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அ. முக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.