டிரம்ப் உத்தரவுக்கு ஜப்பான் கட்டுப்படாது -பிரதமர் ஷிகேரு இஷிபா
பைக் - காா் மோதல்: உணவக ஊழியா் உயிரிழப்பு
புதுக்கோட்டை அருகே குளத்தூா் பிரிவு சாலையில் இரு சக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற உணவகப் பணியாளா் காா் மோதி உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூா் மங்களத்துப்பட்டியைச் சோ்ந்தவா் துரைசாமி மகன் ராமராஜ் (34). இவா், பொம்மாடிமலைப் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் வேலை பாா்த்து வந்துள்ளாா்.
சனிக்கிழமை காலை உணவகத்துக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் வந்த இவா், குளத்தூா் பிரிவு சாலையில் சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற காா் ஒன்று இவா் மீது மோதியது. இந்த விபத்தில், ராமராஜ் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா்.
கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராமராஜின் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். காரை ஓட்டி வந்த திருச்சி நம்பா் ஒன் டோல்கேட் பகுதியைச் சோ்ந்த ஹரிஹரன் மகன் கரண் (25) என்பவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.