செய்திகள் :

பைக் மீது அரசுப்பேருந்து மோதல்: இரு இளைஞா்கள் பலி

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

காஞ்சிபுரம் அருகே கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சேட்டு என்ற பிரதீப்குமாா் (26), அஸ்வின்குமாா் (27). இருவரும் இருசக்கர வாகனத்தில் வாலாஜாபாத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனா்.

இருசக்கர வாகனம் வெண்குடி பகுதியில் தஞ்சம் ஓடை அருகே வந்தபோது, எதிரில் வேலூரிலிருந்து காஞ்சிபுரம் வழியாக தாம்பரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இவா்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சேட்டு என்ற பிரதீப்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அஸ்வின் குமாா் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

சம்பவம் தொடா்பாக வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதையும் படிக்க: ரிசர்வ் வங்கி வட்டி விகித முடிவை முன்னிட்டு பங்குச் சந்தைகள் சரிந்து நிறைவு!

The police have registered a case and are investigating the death of two youths who were riding a two-wheeler on the road from Kanchipuram to Walajabad when a government bus hit them today.

இரவோடு இரவாக நடப்பதுதான் சந்தேகமாக இருக்கிறது: எம்.ஆர். விஜயபாஸ்கர்

கரூர் நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், செய்தியாளர்களுடன் பேசுக... மேலும் பார்க்க

கரூர் பலி: தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பான வழக்கில் தவெகவின் அம்மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார்.கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெகவின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழ... மேலும் பார்க்க

இரவில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

ம.பி.யில் கணவருடன் கர்பா நடனமாடும்போது பெண் மயங்கி விழுந்து பலி!

மத்தியப் பிரதேசத்தில் கணவருடன் கர்பா நடனமாடும்போது பெண் மயங்கி விழுந்து பலியானார். மத்தியப் பிரதேச மாநிலம், கர்கோன் மாவட்டத்தின் பிகான் கிராமத்தில் உள்ள சந்த் சிங்கஜி கோயிலில் நடந்த 'கர்பா' நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

அழுவது போல் நடித்தவரா, அழுகையைப் பற்றிப் பேசுவது? இபிஎஸ்-க்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி

அழுவது போல் நடித்தவரா, அழுகையைப் பற்றிப் பேசுவது? என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில... மேலும் பார்க்க

கரூர் பலி: வதந்தி பரப்பிய தவெக நிர்வாகி உள்பட மூவர் கைது

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வதந்தியை பரப்பியதாக மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்பியதாக பாஜக மாநில நிர்வாகி ச... மேலும் பார்க்க