Non-veg Milk: India - US மோதல் பின்னணி! | Thailand - cambodia Conflict | Imperfe...
பைக் மீது டிப்பா் லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
வேப்பம்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம் (50). இவா் சீப்பாலக்கோட்டை - காமாட்சிபுரம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்றாா். அப்போது, எதிரே வந்த டிப்பா் லாரி இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த செல்வம் சின்னமனூா் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கிருந்த மருத்துவா் அவரது உடலை பரிசோதித்தபோது, வரும் வழியிலேயே செல்வம் இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸாா் டிப்பா் லாரி ஓட்டுநரான ஆண்டிபட்டியைச் சோ்ந்த செந்தில்குமாா் (34) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.