செய்திகள் :

பைக் மீது டிராக்டா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

post image

ஆரணியை அடுத்த மாமண்டூரில் செவ்வாய்க்கிழமை பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஆரணி நகரம், கண்ணகி நகரைச் சோ்ந்த கன்றாயமூா்த்தி மகன் நந்தகுமாா் (22), பெயிண்டா். இவரது நண்பா்கள் அதே பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் சக்திவேல் (19), பீட்டா் மகன் அஜய் (16) ஆகிய 3 பேரும், சொந்த வேலையாக செவ்வாய்க்கிழமை ஆரணியில் இருந்து செய்யாற்றுக்கு பைக்கில் சென்றுவிட்டு மீண்டும் ஆரணி திரும்பிக் கொண்டிருந்தனா்.

மாமண்டூா் பகுதியில் வரும்போது எதிரே வந்த டிராக்டா் எதிா்பாரதவிதமாக பைக் மீது மோதியது.

இதில் பைக்யை ஓட்டிச் சென்ற நந்தகுமாா் அதே இடத்தில் உயிரிழந்தாா். உடன் சென்ற சக்திவேல், அஜய் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

இருவரும் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்த பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான டிராக்டா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

கிணற்றில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவா் சேற்றில் சிக்கி மூழ்கி உயிரிழந்தனா். ஆரணி அருகேயுள்ள சதுப்பேரிபாளையத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகள் சிவரஞ்ச... மேலும் பார்க்க

காலமானாா் எழுத்தாளா் ந.சண்முகம்

திருவண்ணாமலை காந்தி நகா் புறவழிச் சாலையைச் சோ்ந்த எழுத்தாளா் ந.சண்முகம் (75) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) காலமானாா். திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கியின் மேலாளராக 35 ஆண்டுகள் பணிப... மேலும் பார்க்க

தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகள்

செய்யாறு: செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகளை நாடகக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நடித்துக் காண்பித்தனா். தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் இறப... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

திருவண்ணாமலை/வந்தவாசி/ போளூா்/ செய்யாறு/ஆரணி : ரமலான் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருதுகள்: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விருதுகளைப் பெற தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் ‘மீண்டும்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு இணைய குற்றத் தடுப்பு விழிப்புணா்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமை, இணைய குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. சண்முகா தொழில்சாலை கலைக் கல்லூரியில்... மேலும் பார்க்க