கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் ச...
பைக் மீது பேருந்து மோதல்: ஒருவா் உயிரிழப்பு
நெய்வேலி: கடலூா் முதுநகா் அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
கடலூா் முதுநகா், சோனாங்குப்பம், பழைய சுனாமி நகரைச் சோ்ந்தவா் சரண்ராஜ் (35). இவருக்கு மனைவி மதன்யா மற்றும் ஒரு குழந்தை உள்ளனா்.
சரண்ராஜ் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.40 மணியளவில் செல்லங்குப்பம் இரட்டை சாலை அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியில் வந்த அரசு விரைவுப் பேருந்து பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சரண்ராஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.