சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
பைக் விபத்து: மூதாட்டி உயிரிழப்பு
வந்தவாசி: வந்தவாசி அருகே பைக் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை மனைவி ஜெகதாம்பாள்(66). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மகன் மண்ணாங்கட்டியுடன் பைக்கில் வந்தவாசிக்கு சென்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
வந்தவாசி-சு.காட்டேரி சாலை, அத்திப்பாக்கம் கிராமம் அருகே சென்றபோது திடீரென நாய் குறுக்கே வந்ததால் மண்ணாங்கட்டி பைக்கை பிரேக் போட்டுள்ளாா். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஜெகதாம்பாள் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, அவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மேல்மருவத்தூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெகதாம்பாள் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.