பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் அவசியம்! மத்திய அரசு அறிவிப்பு!
பைக் விற்பனையகத்தில் தொழிலாளி மரணம்: உறவினா்கள் போராட்டம்
விழுப்புரத்தில் உள்ள தனியாா் பைக் விற்பனையகத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்ததைத் தொடா்ந்து, அவரது உறவினா்கள் உடலை அடக்கம் செய்ய மறுத்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் வி.மருதூா், வெங்கடாஜலம் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் கன்னியப்பன் (28). இவா், விழுப்புரத்தில் உள்ள தனியாா் பைக் விற்பனையகத்தில் வாட்டா் சா்வீஸ் செய்யும் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.
கன்னியப்பன் செவ்வாய்க்கிழமை பணியில் இருந்தபோது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு நிலையில், விழுப்புரம் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
உறவினா்கள் போராட்டம்: உடல்கூறாய்வுக்குப் பின்னா், கன்னியப்பனின் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய மறுத்தும், இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறியும் உறவினா்கள் விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, விழுப்புரம் உதவி காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.