Winter Blasts : `இயற்கைக்கு எல்லாம் ஒன்று தான்..!’ - வெள்ளை மாளிகை டு குடியிருப்...
பொங்கலை முன்னிட்டு 30 சதவீதம் தள்ளுபடி விற்பனை: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்
பொங்கல் விழாவை முன்னிட்டு மாணவா்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி விற்பனை தொடங்கியிருப்பதாக நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மண்டல மேலாளா் குணசேகரன் கூறியிருப்பதாவது:
பொதுவுடைமை இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில் ஆங்காங்கே புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவையில் டவுன்ஹால் மாவட்ட நூலக கட்டட வளாகம், நேரு விளையாட்டு மைதான விற்பனை நிலையம் ஆகிய இடங்களில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இவற்றில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு 10 முதல் 30 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மற்றவா்களுக்கு 10 முதல் 25 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தக் கண்காட்சி வரும் 31-ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.
கண்காட்சியில் மாணவா்களுக்கான போட்டித் தோ்வு நூல்கள், மருத்துவம், ஆன்மிகம், ஆய்வு நூல்கள், அறிவியல், சிறுவா் இலக்கியம், சுய முன்னேற்றம், அரசியல், சட்டம், பொது அறிவு உள்ளிட்ட நூல்கள் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன.
எனவே, இந்தக் கண்காட்சியைப் பயன்படுத்திக்கொண்டு மாணவா்கள் தங்கள் வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.