செய்திகள் :

"பொங்கல் பரிசுடன் குடும்பத்திற்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்" - செல்லூர் ராஜூ சொல்லும் காரணம் என்ன?

post image

புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்  குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ-வுமான செல்லூர் ராஜூ, பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "2025 ஆம் ஆண்டு அ.தி.மு.க-விற்கு எழுச்சியான ஆண்டாக இருக்கும். 2025 ஆம் ஆண்டில்  தமிழக மக்களுக்கு விடியல் கிடைக்கும். தமிழக மக்களுக்கு விடியல் கிடைப்பதற்கான பயணத்தை அ.தி.மு.க முன்னெடுத்துச் செல்லும்.

பொங்கல்

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட கொடுமை இனி தமிழகத்தில் எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது. தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ அ.தி.மு.க ஆட்சி அமைய வேண்டும். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தும், ஒருங்கிணைந்து அ.தி.மு.க தேர்தல் களத்தைச் சந்திப்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்.

தமிழக மக்களுக்காக அரசியல் செய்யக்கூடிய கட்சியாக அ.தி.மு.க திகழ்ந்து வருவதால்தான் 63 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளனர். 2025 ஆம் ஆண்டு அ.தி.மு.க-விற்கு எழுச்சி தருகிற ஆண்டாகவும் மகிழ்ச்சி தருகிற ஆண்டாகவும் திகழும்.

செல்லூர் ராஜூ

அ.தி.மு.க ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் 2500 ரூபாய் கொடுத்தோம். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்றார். அப்படிப் பார்த்தால் இன்றைய மதிப்பில் 30 ஆயிரம் ரூபாய் வருகிறது. எனவே இந்த அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். கடந்த முறை போராடித்தான் ஒரு கரும்புடன் 1000 ரூபாய் கிடைத்தது. ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களுக்கு உரிய இழப்பீடும், காப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga

``கொடநாட்டில் CCTV-ஐ ஆஃப் செய்ய சொன்ன 'Sir' யார்?" - ஓ.பி.எஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் கேள்வி!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொந்தரவு சம்பவத்தில் கைதாகி உள்ள ஞானசேகரன் போனில் யாருடனோ 'சார்' என்று பேசினார் என்று பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போதிருந்து 'யார் அ... மேலும் பார்க்க

TN Assembly: "கடந்த ஆண்டே தெளிவுபடுத்தி இருக்கிறோம்" - ஆளுநர் வெளியேறியது குறித்து துரைமுருகன்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம்.அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கவிருந்தது. இதற்காக ஆளுநர் ரவி இன... மேலும் பார்க்க

TN Assembly : `வெளியேற்றப்பட்ட அதிமுக; வெளியேறிய காங்கிரஸ்...' சட்டசபையில் நடந்தது என்ன?

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வந்த வேகத்தில் புறப்பட்டு சென்றிருக்கிறார்.இன்று ஆளுநர், சட்டமன்றத்துக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் ... மேலும் பார்க்க

`தமிழக சட்டசபையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டுள்ளது’ - ஆளுநர் மாளிகை ட்விட்டர் பதிவும் நீக்கமும்

2025 -ன் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. தேசிய கீதம் முதலில் பாடவில்லை என்பதை கண்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் சட்டசபையைவிட்டு வெளியேறினார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட... மேலும் பார்க்க

TN Assembly : 2025-ன் முதல் சட்டப்பேரவை கூட்டம்... பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் ஆளுநர் உரை! | Live

இன்று ஆளுநர் உரை..!2025ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்க... மேலும் பார்க்க

`திமுக வெளிச்சத்தில் நாங்கள் இருக்கிறோமா?’ - முரசொலியை சாடும் மா.கம்யூனிஸ்ட் பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் ஜனவரி 3-ம் தேதி துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற அந்த மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்... மேலும் பார்க்க