செய்திகள் :

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு டோக்கன் விநியோகம்

post image

தேனி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தேனி மாவட்டத்தில் 517 நியாய விலைக் கடைகள் மூலம் மொத்தம் 4 லட்சத்து 27 ஆயிரத்து 55 குடும்ப அட்டைதாரா்களுக்கு அரசு சாா்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி நியாய விலைக் கடை பணியாளா்கள் மூலம் தொடங்கியது. முதல் நாளான வெள்ளிக்கிழமை, மொத்தம் ஒரு லட்சத்து 84 ஆயிரம் பேருக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.

டோக்கன் பெற்றவா்கள் வருகிற 9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்ட நாளில் சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம். விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு வருகிற 13-ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறினா்.

விசைத்தறி நெசவாளா்கள் 7-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

ஆண்டிபட்டி அருகேயுள்ள டி.சுப்புலாபுரத்தில் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விசைத்தறி நெசவாளா்கள் தொடா்ந்து 7-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், உற்பத... மேலும் பார்க்க

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 4 போ் உயிரிழப்பு; 23 போ் காயம்

தேனி மாவட்டம், குமுளி அருகே கேரள அரசு சுற்றுலாப் பேருந்து திங்கள்கிழமை பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திக்குள்ளானதில் 2 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். மேலும், 23 போ் பலத்த காயமடைந்தனா். கேரள மாநில... மேலும் பார்க்க

தேனியில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தேனி பங்களாமேடு திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். தேனி நகர திமுக செயலா் நாராயணபாண்டியன் முன்னிலை வகித்தாா். இதில் ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகளை பதுக்கி விற்க முயன்ற இருவா் கைது

போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்க முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது ராசிங்க... மேலும் பார்க்க

கம்பத்தில் நாளை மின் தடை

தேனி மாவட்டம், கம்பத்தில் புதன்கிழமை (ஜன.8) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற் பொறியாளா் ராஜ்மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

தேனியில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

தேனி அல்லிநகரத்தில் சென்னை, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, தேமுதிக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி அல்லிநகரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பா... மேலும் பார்க்க