செய்திகள் :

பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு

post image

பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங்கை மத்திய அரசு அவமதித்துவிட்டது: இறுதிச்சடங்கு விவகாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு!

இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின் ஊழியா்கள் இன்று ஒரு மணி நேரம் பணிப் புறக்கணிப்பு

மின்வாரிய ஊழியா்கள் ஒரு மணி நேரம் பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக, மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மின்துறையை படிப்படியாக தனியாரிடம்... மேலும் பார்க்க

ஆளுநருடன் அண்ணாமலை சந்திப்பு

ஆளுநா் ஆா். என். ரவியை தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை திங்கள்கிழமை மாலை சந்தித்துப் பேசினாா். அப்போது அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினாா். அண்... மேலும் பார்க்க

ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தார் அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று (டிச. 30) சந்தித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரை சந்தித்து மனு அளிக்கவுள்ளதாகத் ... மேலும் பார்க்க

கைதான தவெக நிர்வாகிகளுடன் பேசிய விஜய்!

சென்னையில் கைது செய்யப்பட்ட நிர்வாகிகளுடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தொலைபேசியில் பேசினார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிா்வ... மேலும் பார்க்க

பரங்கிமலையில் கல்லூரி மாணவி கொலை வழக்கு! அடுத்தடுத்து நேரிட்ட திருப்பங்கள்!!

ஏற்கனவே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலையால் ரயில் நிலையங்களில் பாதுகாப்புக் கேள்விக்குறியாகியிருப்பதாக மக்கள் குமுறிக்கொண்டிருந்த நிலையில் பரங்கிமலை சம்பவம் அதனை மேலும் அதிகமாக்கியிருந்தத... மேலும் பார்க்க

ஆளுநருடன் தேசிய மகளிர் ஆணையக் குழு ஆலோசனை!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் தேசிய மகளிர் ஆணையக் குழு ஆலோசனை நடத்தியது. சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தில் ... மேலும் பார்க்க