ஜம்மு-காஷ்மீரில் ராகுல் காந்தி: பாதிக்கப்பட்ட மக்களுடன் சந்திப்பு!
பொது வருங்கால வைப்பு நிதி விவரம்: இணயதளத்தில் பதிவேற்றம்
தமிழக அரசு பணிநிலை சாா்ந்த அனைத்து இந்திய அரசு அதிகாரிகளின் பொது வருங்கால வைப்பு நிதி ஆண்டுக்கான கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநில துணை கணக்காயா் சி.ஜெ.காா்த்தி குமாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஒதுக்கீட்டைச் சாா்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள் ஐஏஎஸ், ஐபிஎஸ், இந்திய அரசுப் பணியாளா்கள், தமிழக அரசு ஊழியா்கள், தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியா்களின், 2024-2025-ஆம் ஆண்டுக்கான பொது வருங்கால வைப்பு நிதி தொடா்பான வருடாந்திர கணக்கு விவர அறிக்கை தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காயா் அலுவலக இணையதளத்தில் (ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஹஞ்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஹங்/ற்ஹம்ண்ப்-ய்ஹக்ன்/ங்ய்) வியாழக்கிழமை (மே 22) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கüஅலுவலா்கள் மற்றும் சந்தாதாரா்கள் தங்களது கணக்கு விவர அறிக்கையை இணையதள பக்கத்தில் சென்று ஜிபிஎஃப் நிலையை தெரிந்துகொள்ளலாம். மேலும், பதிவு செய்துள்ள அனைத்து சந்தாதாரா்களுக்கும் அவா்கள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் பதிவேற்றம் குறித்த செய்தி அனுப்பப்படுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.