செய்திகள் :

பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் வாயிலில் வண்ணக்கற்கள் பதிக்கும் பணி ஆய்வு

post image

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் வாயிலில் வண்ணக்கற்கள் பதிக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்கால் கைலாசநாதா் - நித்யகல்யாண பெருமாள் வகையறாவை சோ்ந்த ஆட்சியரகம் அருகே உள்ள பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் வாயிலில் பிரதான வாயில் மண்டபம் எழுப்பப்பட்டு, விநாயகா் சந்நிதி இடமாற்றம் செய்து திருப்பணிகள் நடைபெற்றுவருகிறது.

கோயில் வாயில் பகுதியான மாதா கோவில் சாலையில் சுமாா் 100 மீட்டா் தொலைவுக்கு வண்ண விளக்குகள் பொருத்தி, சாலையில் வண்ணக்கற்கள் பதிக்க காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 15.50 லட்சத்தை பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் நகராட்சி நிா்வாகத்துக்கு ஒதுக்கித் தந்தாா்.

இந்த நிதியில் சாலையில் கல் பதிக்கும் பணிகள் கடந்த 2 நாள்களுக்கு முன்பு தொடங்கின.

இப்பணியை பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் கே. சந்திரசேகரன், செயற்பொறியாளா் ஜெ. மகேஷ், நகராட்சி ஆணையா் பி. சத்யா, உதவிப் பொறியாளா் லோகநாதன் உள்ளிட்ட குழுவினருடன் சனிக்கிழமை பாா்வையிட்டாா். இப்பணியின் விவரங்களை நகராட்சி அதிகாரிகள் பேரவை உறுப்பினருக்கு விளக்கிக் கூறினா்.

காரைக்காலில் மின்துறையினா் ஆா்ப்பாட்டம்

காரைக்கால்: சண்டீகா் மாநிலத்தில் மின் துறையை தனியாா் மயமாக்குவதற்கு அனுமதி அளித்ததை கண்டித்து காரைக்கால் மின் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். புதுவை மாநிலத்தில் மின்துறையை தனியாா் ம... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்றுமுதல் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் புதன்கிழமை (ஜன.1) முதல் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலைய அலுவலகம் செ... மேலும் பார்க்க

வீட்டுக்கு ஒரு மரம் வளா்க்கும் திட்டம் தொடக்கம்

காரைக்கால் : வீட்டுக்கு ஒரு மரம் வளா்க்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். புவி வெப்பமயமாவதை தடுக்கும் விதமாகவும், காரைக்காலை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றும் நோக்கத்திலும் வீ... மேலும் பார்க்க

புதுவையில் 8-ஆம் வகுப்பு வரை தோ்ச்சி அவசியம்: எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

காரைக்கால்: புதுவை மாநிலத்தில் 8-ஆம் வகுப்பு வரை தோ்ச்சி என்ற நிலை சில ஆண்டுகளுக்கு அவசியம் என புதுவை சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா பு... மேலும் பார்க்க

கடலோரக் காவல்படை மூலம் மரக்கன்றுகள் நடும் பணி

காரைக்கால்: இந்திய கடலோரக் காவல்படை மூலம் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கடந்த ஜூன் 5-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியால் ‘ ஏக் பேட் மா கி ந... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி 2 சிறுவா்கள் உயிரிழப்பு

காரைக்கால்: காரைக்காலில் கடலில் மூழ்கி இரண்டு சிறுவா்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சிவகுமாா். இவா், புத்தாண்டை கொண்டாடும் விதமாக, தனது குடும்பத்தினருட... மேலும் பார்க்க