காரைக்காலில் இன்றுமுதல் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயம்
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் புதன்கிழமை (ஜன.1) முதல் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என காவல்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலைய அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் அதிக திறன் கொண்ட மோட்டாா் சைக்கிளில் அதிவேகமாக செல்லுதல், வாகனங்களில் நம்பா் பிளேட்டுகளை பொருத்தாமல் செல்லுதல், மது போதையில் வாகனங்களகை ஓட்டுதல் ஆகியவை மோட்டாா் வாகன சட்டப்படி குற்றமாகும். இவ்வாறான செயலில் ஈடுபட்டால் வாகனத்தை பறிமுதல் செய்து மோட்டாா் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மாவட்டத்தில் புதன்கிழமை முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். மீறும் வாகன ஓட்டிகள் மீது மோட்டாா் வாகன சட்டத்தின் கீழ் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும். சாலைப் பயன்பாட்டாளா்கள் சாலை விதிகளை மதித்து, விபத்தில்லா காரைக்கால் என்ற நிலையை உருவாக்க ஒத்துழைப்பு தருமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.