செய்திகள் :

கடலில் மூழ்கி 2 சிறுவா்கள் உயிரிழப்பு

post image

காரைக்கால்: காரைக்காலில் கடலில் மூழ்கி இரண்டு சிறுவா்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சிவகுமாா். இவா், புத்தாண்டை கொண்டாடும் விதமாக, தனது குடும்பத்தினருடன் காரைக்கால் கடற்கரைக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். அவரது மகன் ஸ்ரீவிஷ்ணு (17), மகள் பிரியதா்ஷினி (15), அவரது தோழி காா்த்திகா ஆகியோா் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது அலையில் சிக்கி, உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனா்.

போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் பொதுமக்கள் உதவியுடன் மூவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனா். இதில், பிரியதா்ஷினி, காா்த்திகா இருவரும் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஸ்ரீவிஷ்ணுவின் சடலம் முகத்துவார கருங்கற்கள் பகுதியில் மீட்கப்பட்டது.

மற்றொரு சிறுவன் உயிரிழப்பு:

காரைக்கால் அருகேயுள்ள புதுத்துறை பகுதி சோ்ந்த ரமேஷ் மகன் நிசன்ராஜ் (17). இவா் தனது நண்பா்களுடன் காரைக்கால் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை குளித்துக்கொண்டிருந்தபோது அலையில் சிக்கி, உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கினாா்.

இதில், ஸ்ரீவிஷ்ணு 9-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தாா். நிசன்ராஜ் காரைக்கால் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இருவா் சடலத்தையும் காரைக்கால் நகர போலீஸாா் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் சமூக நலத்துறை சாா்பில் கொண்டாடப்படவுள்ள உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி காரைக்கால் கோயில்பத்து அரசு உயா்நிலை பள்... மேலும் பார்க்க

சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

பல்வேறு பகுதி சாலைகள் மேம்பாட்டுப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் தொடங்கிவைத்தாா். நிரவி-திருப்பட்டினம் தொகுதி, நிரவி கொம்யூன் பஞ்சாயத்துக்குள்பட்ட பகுதிகளில், சிதிலமடைந்த நிரவி ஹாஜியாா் சாலை மற்றும் அத... மேலும் பார்க்க

காா்னிவல் திருவிழாவை சரியான திட்டமிடலுடன் நடத்த வேண்டும்

காரைக்கால் காா்னிவல் திருவிழாவை சரியான திட்டமிடலுடன் சிறப்பாக நடத்த வேண்டும் என்றாா் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன். காரைக்காலில் நி... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பகுதியில் எல்லைக்குள் வாகனங்களை நிறுத்த வேண்டும்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பகுதியில் பூஜைப் பொருள்கள் கடைகள், வாகனங்கள் குறிப்பிட்ட பகுதிக்குள் நிறுத்தும் வகையில் எல்லைக்கோடு போடப்பட்டுள்ளது. திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் க... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

காரைக்கால் கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத் தலைவா் சி.பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஆன்லைன் முறையில் பத... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

திருநள்ளாறு அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா். திருவாரூா் மாவட்டம், பெருந்தாகுடி பகுதியை சோ்ந்த சரசு மகன் மாரிமுத்து (46). செஃப்டிக் டேங்க் தூய்மை செய்யும் பணி செய்து வந்த இவருக்கு திருமணம... மேலும் பார்க்க