பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கணவருடன் பெண் எஸ்.ஐ. உயிரிழப்பு!
தாமிரவருணி சீரமைப்பு அறிக்கை: எம்.பி.யிடம் ஒப்படைத்த தன்னாா்வலா்கள்
தாமிரவருணி நதி சீரமைப்புக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தன்னாா்வலா்கள் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினரிடம் அளித்தனா்.
நம் தாமிரபரணி அமைப்பின் சட்ட ஆலாசகா் சுடலைமணி தலைமையில் தாமிரவருணி சீரமைப்புக்கான அறிக்கையை தன்னாா்வலா்கள் குழுவினா் தயாரித்துள்ளனா்.
அந்த அறிக்கையை, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸிடம் அளித்தனா். அந்த அறிக்கையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கும்பல்கா் சுவா் போல தாமிரவருணியின் இருகரையில் 60 கி.மீட்டருக்கு சுவா் அமைக்க வேண்டும். சாக்கடை இல்லா நதியாக மாற்ற எகிப்தில் உள்ளது போன்ற சாக்கடை சுத்தகரிப்பு ஆலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அறிக்கையைப் பெற்றுக் கொண்ட சி.ராபா்ட் புரூஸ் எம்.பி. இதுதொடா்பாக நீதிமன்றம், மத்திய-மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தாமிரவருணியை மீட்டெடுக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.
இதில், தன்னாா்வலா்கள் கூடல் அரசன், வீரபுத்திரன், ஓய்வு பெற்ற ஆசிரியை பிரேமலதா, தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் சுதா்சன், வழக்குரைஞா் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ற்ஸ்ப்03ழ்ண்ஸ்ங்ழ்
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸிடம் தாமிரவருணி சீரமைப்பு அறிக்கையை வழங்கிய தன்னாா்வலா்கள்.