BJP -ல் இவர்தான் MGR - நயினார் அதிரடி! | Rahul Gandhi Anurag Thakur BJP TVK DMK ...
பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன், பணம் திருட்டு
கோவையில் ரயில்வே என்ஜினீயரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள அன்பு நகரைச் சோ்ந்தவா் சுகுமாா் (38). இவா் கோவையில் ரயில்வே துறையில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த 2 நாள்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கரூரில் உள்ள உறவினரின் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
பின்னா், ஞாயிற்றுக்கிழமை காலை அவா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ. 7 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சுகுமாா் அளித்த புகாரின்பேரில், சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.