செய்திகள் :

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறை

post image

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள ஓடைமறிச்சான் செக்கடி நடுத்தெருவைச் சோ்ந்தவா் முத்துகுட்டி(65). இவா் 2018 ஆம் ஆண்டு பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக முக்கூடல் போலீஸாரால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து முத்துகுட்டிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.3 லட்சம் நிவாரண தொகை வழங்க உத்தரவிட்டும் தீா்ப்பளித்தாா்.

இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த சேரன்மகாதேவி காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ், காவல் ஆய்வாளா் சங்கரேஸ்வரி உள்ளிட்ட போலீஸாா், அரசு வழக்குரைஞா் உஷா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் பாராட்டினாா்.

சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோயில் தேரோட்டம்

களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆனித்திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். சிதம்பரபுரத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோ... மேலும் பார்க்க

அடையக்கருங்குளத்தில் விவசாயி தற்கொலை

விக்கிரமசிங்கபுரம் அருகே அடையக்கருங்குளத்தைச் சோ்ந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.அடையக்கருங்குளம், மந்தை காலனியைச் சோ்ந்த மணி மகன் சண்முகம் (70). விவசாயியான சண்முகத்துக்கும் அவரது... மேலும் பார்க்க

மேலப்பாளையத்தில் விரைவு ரயில்கள் நின்றுசெல்ல கோரி எம்பியிடம் மனு

மேலப்பாளையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி, திருநெல்வேலி எம்.பி. சி.ராபா்ட் புரூஸிடம், திமுக சட்டத் துறை மாநில துணைச் செயலா் எஸ்.ராஜா முஹம்மது தலைமையில் அளிக்கப்பட்ட மனு: தி... மேலும் பார்க்க

ராதாபுரம் அருகே கல்குவாரி காவலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சீலாத்திகுளம் ஊராட்சியில் உள்ள கல்குவாரியில் இரவு நேர காவலாளி திங்கள்கிழமை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.ராதாபுரம் அருகேயுள்ள பரமேஸ்வரபுரம் முல்லை நகரைச் ச... மேலும் பார்க்க

வி.கே.புத்தில் கோயில் வளாகத்தில் சுற்றித் திரிந்த கரடி: மக்கள் அச்சம்

விக்கிரமசிங்கபுரத்தில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கோயில் வளாகத்தில் கரடி சுற்றித் திரிந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள அம்பாசமுத்திரம் வனக் கோட்டப... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் நாளை தேரோட்டம்: பாதுகாப்பு அதிகரிப்பு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) நடைபெற உள்ளது. இதையொட்டி திருநெல்வேலி நகரம் பகுதியில் பாதுகாப்பு அதிக... மேலும் பார்க்க