அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தனியார் பள்ளிகள் நிதியுதவி? பாஜக, கம்யூ. கண்டனம்
போக்ஸோ வழக்கு: முதியவருக்கு 7 ஆண்டு சிறை
போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தூத்துக்குடியைச் சோ்ந்த 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், தூத்துக்குடி முத்தையாபுரம் சுபாஷ் நகரைச் சோ்ந்த மேகநாதனை (72) தூத்துக்குடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸேசா சட்டத்தின் கீழ் கைது செய்தனா். இவ்வழக்கின் விசாரணை, தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், குற்றம்சாட்டப்பட்ட மேகநாதனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா்.