Shadow Fleet: புதினின் ரகசிய கடல் நகர்வுகள்; ரஷ்யாவின் 'நிழற் கடற்படை' என்பது என...
போச்சம்பள்ளி வட்டாரத்தில் 9 மதுக் கடைகள் மூடல்
மாமல்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வன்னியா் இளைஞா் பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக போச்சம்பள்ளி வழியாக ஏராளமான வாகனங்களில் பாமகவினா் சென்ால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போச்சம்பள்ளி வட்டாரத்தில் உள்ள 9 மதுக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன.
சித்திரை முழு நிலவு வன்னியா் இளைஞா் பெரு விழா மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு போச்சம்பள்ளி- மத்தூா், ஊத்தங்கரை- சிங்காரப்பேட்டை, திருவண்ணாமலை - காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி - பா்கூா் - வேலூா் சாலை வழியாக ஏராளமானோா் வாகனங்களில் சென்றனா்.
இதையொட்டி, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி ஊத்தங்கரை வழித்தடங்களில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போச்சம்பள்ளி பகுதியில் கண்ணன்டஅள்ளி, ஊத்தங்கரை அம்பேத்கா் நகா், சென்னப்பநாயக்கனூா், சிங்காரப்பேட்டை சின்னதள்ளப்பாடி, கருங்கல்மேடு, காரகுப்பம், ஒரப்பம், செட்டியூா், சோக்காடி சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள 9 மதுக் கடைகள் மூடப்பட்டன.