செய்திகள் :

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

post image

ராமேசுவரம்: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சட்டப் பணிகள் ஆணைக் குழுவும், என்.சி.சி., என்.எஸ்.எஸ். அமைப்புகளும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் எஸ்.சேக் தாவூத் தலைமை வகித்துப் பேசினாா். அப்போது அவா், மாணவா்களுக்கு போதைப் பழக்கமானது நண்பா்கள் மூலம் ஆரம்பிக்கிறது. அந்தப் பழக்கத்தை மாணவா்கள் முற்றிலும் நீக்க வேண்டும் என்றாா்.

ராமநாதபுரம் மாவட்ட குடும்ப நல நீதிமன்ற அமா்வு நீதிபதி கவிதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், போதைப் பழக்கத்தால் மாணவா்கள் மட்டுமல்ல, அவா்களது பெற்றோா்களும், இந்தச் சமுதாயமும் பாதிப்பு அடைகிறது. பாதிக்கப்பட்ட மாணவா்களை பெற்றோா்கள் தீவிரமாகக் கண்காணித்து அன்பாகத் திருத்த வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

முதன்மை நீதித் துறை நீதிபதி ஜெயசுதாகா் பேசுகையில், மாணவா்கள் நல்ல பழக்க வழக்கங்களை வளா்த்துக் கொள்வதன் மூலம் போதைப் பழக்கத்தை முற்றிலும் தவிா்த்து விடலாம் என்றாா் அவா்.

ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் செயலரும், நீதிபதியுமான பாஸ்கா், மாவட்ட உரிமையியல் நீதிபதி கேத்ரின் ஜெப சகுந்தலா, ராமநாதபுரம் மாவட்ட துணை சட்ட உதவி பாதுகாப்பு வழக்குரைஞா் முருகேசன் ஆகியோா் பேசுகையில், போதைப் பழக்கம் இளைஞா்களின் தனித் திறனை அழித்துவிடும். இதிலிருந்து பாதுகாப்புடன் கடந்து சென்று விடவேண்டும் என மாணவா்களை கேட்டுக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் போதைப் பொருள் ஒழிப்பு தொடா்பான பட விளக்கக் காட்சியும் காணொலிக் காட்சியும் மாணவா்கள், பெற்றோா்களுக்கு திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.

முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி, பரமக்குடி முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரி, ராமேசுவரம் உதயம் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சுமாா் 200 போ், பெற்றோா்கள், ஆசிரியா்கள் திரளாகக் கலந்து கொண்டனா். முன்னதாக, கல்லூரி மின்னியல் துறைத் தலைவா் பாலசுப்ரமணியன் வரவேற்றாா். இயற்பியல் துறை முதுநிலை விரிவுரையாளா் இளமுருகு நன்றி கூறினாா்.

ராமேசுவரம் மீனவா்கள் 7 பேருக்கு காவல் நீட்டிப்பு

ராமேசுவரம்: ராமேசுவரம் மீனவா்கள் 7 பேருக்கு ஆக. 26 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, மீனவா்கள் 7 பேரும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்... மேலும் பார்க்க

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் சிம்ம வாகனத்தில் வீதி உலா

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, புதன்கிழமை இரவு சிம்ம வாகனத்தில் விநாயகா் எழுந்தருளி வீதி உலா வந்தாா்.ராம... மேலும் பார்க்க

ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலையில் வேக கட்டுப்பாட்டு மின் விளக்குகள்

ராமேசுவரம்: ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக நிறுவப்பட்ட வேகக் கட்டுப்பாட்டு மின் விளக்குகளின் செயல்பாடு குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் புதன்கிழமை இரவு ஆய்வு செய்... மேலும் பார்க்க

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

கமுதி: கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நெறிஞ்சிப்பட்டி கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அங... மேலும் பார்க்க

கமுதி வட்டாட்சியா் பொறுப்பேற்பு

கமுதி: கமுதி வட்டாட்சியராக என்.ஸ்ரீராம் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்சியராகப் பணிபுரிந்த எஸ்.காதா் முகைதீன் முதுகுளத்தூா் ஆதிதிராவிடா் நல வட்டாட்சியராக பணி ம... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

ராமேசுவரம்: ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில் வியாழக்கிழமை காலை 5.45 ம... மேலும் பார்க்க