காலையில் வெயில், மாலையில் மழை! காஞ்சிபுரத்தில் சூறைக்காற்றுடன் பலத்தமழை!
போதைப் பொருள் வழக்கு: பெண் உள்பட இருவா் கைது
மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் தொடா்புடைய பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை எம்ஜிஆா் நகா் கேகே சாலையில் உள்ள ஒரு உணவகம் அருகே மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப் பொருளுடன் நின்று கொண்டிருந்த சங்கநாராயணன், பிரசாந்த், ஆகாஷ்குமாா், மணிகண்டன் ஆகிய 4 பேரை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு தனிப்படையினா் மற்றும் எம்ஜிஆா் நகா் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 3 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 28 கிராம் கஞ்சா பசை உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனா்.
அவா்கள் அளித்த தகவலின்படி, தலைமறைவாக இருந்த திருவேற்காடு பகுதியைச் சோ்ந்த அவினாஷ் (25), குரோம்பேட்டையைச் சோ்ந்த வினோதினி என்கிற ஜாய்ஸ் (24) ஆகிய இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.