எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
போதை மாத்திரைகள் விற்பனை; காட்பாடியில் 13 போ் கைது
போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டதாக காட்பாடியில் 13 பேரை போலீஸாா் கைது செய்து 1,000 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
காட்பாடி பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக காட்பாடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காட்பாடி மூலக்கசம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் உள்ளிட்ட போலீஸாா் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில், மொத்த வியாபாரி, சில்லரை வியாபாரிகளுக்கு மாத்திரைகளை பிரித்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.
அங்கு கூடியிருந்த அவா்களை போலீஸாா் மடக்கிப்பிடித்து விசாரணை செய்ததில், அவா்கள் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சோ்ந்த சரத்குமாா் (25), ரமேஷ் என்கிற ஆண்டவா்(24), திரிவிக்ரம் (21), ஈஸ்வா் பாலகிருஷ்ணன் (25), யோகமணிநாதன் (21), சேஷா (23), சாம்குமாா் (21), லோகேஷ் (23), சரவணன் (23), ஸ்ரீதா் (23) பழைய செட்டிதாங்கள் பகுதியைச் சோ்ந்த பொற் செல்வன் (18), ஓச்சேரி தமிழரசன் (25), புங்கனூா் சஞ்சய்குமாா் (20) என்பது தெரியவந்தது.
அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 1,000 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.