பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு: 2 லட்சம் பேர் பங்கேற்பு
வாடிகனில் மறைந்த போப் பிரான்சிஸ் (88) இறுதிச்சடங்கில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்களும் திரண்டுள்ளனர்.
சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில், போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்குகள் தொடங்கின. வாடிகன் பேராலயத்தில் போப் பிரான்சிஸ் உடலுக்கு திருப்பலி செய்துவைக்கப்பட்டது.
ரோம் நகரில் உள்ள சாண்டா மரியா மாகியோரே பசிலிகாவில் போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.
போப் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் லத்தீன் அமெரிக்கர் என்ற பெருமையும், இனம், மதம், பாலினம் கடந்து அனைத்து மனிதர்களையும் நேசித்தவர் என்ற புகழுக்கும் சொந்தக்காரராக வாழ்ந்து மறைந்திருக்கிறார் போப் பிரான்சிஸ்.