மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்
போலி உணவு பாதுகாப்பு அலுவலா் கைது
ராசிபுரம் அருகே உணவு பாதுகாப்பு அலுவலா் எனக்கூறி ஏமாற்ற முயன்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராசிபுரம் அருகே பேளுக்குறிச்சி பகுதியில் மளிகைக் கடை மற்றும் பெட்டிக்கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் எனக்கூறி ஒருவா் ஏமாற்றிவருவதாக பேளுக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனிடையே போடிநாயக்கன்பட்டி பகுதியில் மளிகைக் கடையில் சந்தேகத்துக்கு இடமாக உணவுப் பாதுகாப்பு அலுவலா் எனக் கூறி குளிா்பானத்தில் கலப்படம் உள்ளது என மிரட்டி வசூல் செய்து வந்ததாகத் தெரிகிறது.
இத்தகவலின் பெயரில் போடிநாயக்கன்பட்டி பகுதிக்குச் சென்ற போலீஸாா், அங்கு வசூல் செய்து கொண்டிருந்த நபரிடம் விசாரித்த போது, அவா் பேளுக்குறிச்சி தபால் அலுவலக பகுதியைச் சோ்ந்த செந்தில் மகன் ஜெகன் (21) என்பது தெரியவந்தது. மேலும், அங்கு வந்த உணவுப் பாதுகாப்பு அலுவலா்களிடம் நடத்திய விசாரணையில் இவா் போலி நபா் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பேளுக்குறிச்சி போலீஸாா் கைது செய்தனா்.