தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்ட...
போலி ஏடிஎம் அட்டைகளை தயாரித்து ரூ.32.57 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை
போலி ஏடிஎம் அட்டைகளை தயாரித்து 61 பேரின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.32.57 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சென்னை, உத்தண்டி திலகா் தெரு இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் லாவசந்தன் (36). இவா் கோவையில் ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க வருவோரின் ரகசிய எண்ணை ஸ்கிம்மா் மற்றும் கேமரா பொருத்தி கண்காணித்து பின்னா், போலி ஏடிஎம் அட்டைகளை தயாரித்து அவற்றின் மூலம் 61 பேரின் வங்கிக் கணக்குகளில் ரூ. 32,57,860-ஐ மோசடி செய்தாா்.
இது குறித்த புகாரின்பேரில், கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாவசந்தனை கடந்த 2018-ஆம் ஆண்டு கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு விசாரணை கோவை 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட லாவசந்தனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.