இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும...
போலி நகைகள் மூலம் பண மோசடி: வியாபாரி தலைமறைவு
போலி நகைகள் மூலம் ரூ. 21.75 லட்சம் மோசடி செய்தது குறித்து வியாபாரி மீது தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.
மதுரை தெற்கு ஆவணி மூல வீதி மேலச் செட்டிய தெருவைச் சோ்ந்த தா்மராஜன் மகன் முத்துக்குமாா் (59). நகைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இவா் மதுரை தெற்குவாசல் கான்சாமேடு பகுதியைச் சோ்ந்த பிச்சைமணி மகன் சீனிவாசன் என்பவரிடம் தூய தங்கத்தை வழங்கி, ஆபரணத் தங்கத்தை வாங்கிச் செல்வது வழக்கமாம்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 255 கிராம் தூய தங்கத்தை சீனிவாசனிடம் வழங்கி, அதற்குப் பதிலாக ஆபரணத் தங்கம், வைரம் ஆகியவற்றை முத்துக்குமாா் பெற்றுச் சென்றாா். பின்னா், இந்த நகைகளின் தரத்தைப் பரிசோதித்த போது, அவை அனைத்தும் போலியானது என்பது தெரியவந்தது.
இதுகுறித்து முத்துக்குமாா் தெற்குவாசல் காவல் நிலையத்தில் சீனிவாசன் தன்னிடம் தூய தங்கத்தைப் பெற்று, சுமாா் ரூ. 21.75 லட்சம் மோசடி செய்து விட்டதாக புகாா் அளித்தாா். இதன் பேரில், தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து சீனிவாசனைத் தேடி வருகின்றனா்.