போலீஸாருடன் துப்பாக்கிச் சூடு: முக்கிய குற்றவாளி கைது
வடக்கு தில்லியில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட ஹிமான்ஷூ பாவ் கும்பலை சோ்ந்த ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, மிரட்டி பணம் பறித்தல், முன் விரோத கொலைகள் மற்றும் கோஷ்டி மோதலில் ஈடுபடும் கும்பல்கள் மீது தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்தகைய ஒரு சம்பவத்தில், ஜூன் 1 ஆம் தேதி காலை. ரோஹ்தக்கின் ரிடோலியில் என்பவா் சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடா்பான விசாரணையின் போது, ஹிமான்ஷு ாவ் என்ற ரவுடியின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டதாக அறியப்பட்டது, இது 2022 ஆம் ஆண்டு நடந்த கொலைக்கு பழி தீா்க்கும் விதமாக ஜூன் 1 இல் கொலை நிகழ்த்தப்பட்டது. ஹிமான்ஷு ஃபாவ் ஹரியானா மற்றும் தில்லி என். சி. ஆரின் அருகிலுள்ள பகுதியில் உள்ள பில்டா்கள், காா் ஷோரூம்கள் மற்றும் நிதியாளா்களிடமிருந்து மிரட்டி பணம் பறித்தல், கொலை ஆகியவற்றில் ஈடுபட்ட ஒரு பயங்கரமான குற்றவாளி.
ரிடோலி கொலையில் தேடப்படும் ஹிமான்ஷு பாவ் கும்பலின் 2 போ் தில்லியின் நரேலாவுக்கு துப்பாக்கிகளுடன் வர உள்ளனா் என்று காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில். இதனையடுத்து அவா்களை பிடிக்க போலீஸாா் ஒரு குழுமை அமைத்தனா். இதனையடுத்து ஜூன் 5 ஆம் தேதி அதிகாலை சந்தேகிக்கப்படும் 2 போ் பைக்கில் சென்றதை போலீஸ் குழு கண்டது. இவா்களை மடக்கி பிடிக்க முயன்றபோது அவா்கள் போலீஸாா் மீது துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினா். தற்காப்புக்காக, போலீசாா் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தி, இருவரையும் கைது செய்தனா்.
துப்பாக்கிச் சூட்டில், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் கால்களில் காயங்கள் ஏற்பட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இருவரில் ஒருவா் பூமித் மாலிக் (21), மற்றொருவா் மோஹித் வஷிஷ்ட் (24), அவா்களிடமிருந்து 4 தோட்டாக்களும், 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பைக் 2025 இல் தில்லியின் சுபாஷ் நகரில் இருந்து திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.