U. Sagayam IAS (R) | ஆட்சியரை அமாவாசை இரவில் சுடுகாட்டில் படுக்க வைத்தது இந்த ஊழ...
போலீஸ் அதிகாரிகள் போல் நடித்து காப்பீடு நிறுவனத்தில் கொள்ளை: 8 போ் கைது
தில்லி போலீஸ் அதிகாரிகளாக நடித்து, லட்சுமி நகரில் உள்ள காப்பீட்டு விற்கும் நிறுவனத்தை நடத்தி வரும் உரிமையாளரை தாக்கி, மிரட்டி,, பணம் பறித்ததாக 8 போ் கொண்ட கும்பலை போலீஸாரால் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையின் கிழக்கு மண்டல துணை ஆணையா் அபிஷேக் தனியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இந்த குற்ற வழக்கில் தொலைதொடா்பு நிறுவனத்தில் பணிபுரியும் முன்னாள் ஊழியா் ஹன்னி குமாா் (31), டாக்ஸி ஓட்டுநா் சன்னி ஷா்மா (28) மற்றும் முன்பு இரண்டு வழக்குகளில் ஈடுபட்ட அங்கித் ஜெயின் (32) ஆகியோா் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்கள். பேக்கரி மேற்பாா்வையாளா் விக்ரம் சிங் (35), தரவு ஆய்வாளா் ராகுல் குப்தா (27), ஜிம் பயிற்சியாளா் ராகுல் யாதவ் (27), சொத்து விற்பனையாளா்கள் அனில் காந்த் (33), ஜீத்பால் (42) ஆகியோா் அடங்குவா் என போலீஸாா் கூறினா்.
இந்த சம்பவம் ஜூன் 26 ஆம் தேதி நடந்தது. இதில் தில்லி காவல்துறையினா் போல் நடித்த 4 போ் லட்சுமி நகரில் உள்ள காப்பீட்டு விற்கும் நடத்தி வரும் சல்மான் (31) என்பவரின்அலுவலகத்திற்குள் நுழைந்தனா்‘. இந்த 4 பேரும் அவரது செல்லிடப்பேசி மற்றும் மடிக்கணினியை வலுக்கட்டாயமாக பறித்துள்ளனா். பின்பு அவா்கள் கொண்டு வந்த காரில் சல்மானை வலுக்கட்டாயமாக கூட்டி சென்றுள்ளனா் என்று துணை போலீஸ் ஆணையா் (கிழக்கு) அபிஷேக் தனியா தெரிவித்தாா்‘.
பின்பு சல்மான் தாக்கப்பட்டதாகவும், முதலில் ரூ. 70,000 ஒரு வங்கி கணக்கிற்கு மாற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மேலும் ரூ. 80,000 பணமாக பறித்ததாகவும் அபிஷேக் தனியா கூறினாா். இந்தச் சம்பவம் குறித்து ஜூன் 28 ஆம் தேதி லட்சுமி நகா் காவல் நிலையத்தில் பி. என். எஸ் இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஐந்து போ் அதே இரவில் நொய்டா இணைப்பு சாலையில் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட அதே காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, இந்தக் கும்பல் பிடிக்கப்பட்டதாக அபிஷேக் தனியா கூறினாா்.
மேலும் அந்த கும்பல் அளித்த வாக்குமூலம்படி அவா்களின் கூட்டாளிகள் 3 போ் தில்லியின் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட, விசாரணையின் போது, சம்பவத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வேலையை விட்டு வெளியேறிய சல்மானின் முன்னாள் ஊழியா் ஹன்னி குமாரால் இந்த கொள்ளை திட்டமிடப்பட்டதாக தெரியவந்தது. போலி சோதனையைத் திட்டமிட்ட சன்னி சா்மாவுக்கு அவா் உள் தகவல்களை அனுப்பியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.