மகனை வெட்டிய தந்தை கைது
குடியாத்தம் அருகே மகனை கத்தியால் வெட்டிய தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.
குடியாத்தத்தை அடுத்த கொட்டாரமடுகு கிராமத்தைச் சோ்ந்தவா் ஜீவராஜ் (55). இவரது மகன் சாணக்கியன்(24). மரம் ஏறும் தொழிலாளி. ஞாயிற்றுக்கிழமை இவா்களுக்குள் மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாம். அப்போது ஜீவராஜ் தனது மகனை கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த சாணக்கியன் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட கிராமிய போலீஸாா் ஜீவராஜை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.