பணத்துக்காக காதலனை விற்ற சிறுமி! ரூ. 42 லட்சம் கொடுத்து மீட்ட பெற்றோர்!
அரசுப் பள்ளி சுற்றுச்சுவரை இடித்து பாதையாக பயன்படுத்திய ஒன்றியக்குழு உறுப்பினா் மீது வழக்கு!
ஒடுகத்தூா் அருகே அரசுப்பள்ளி சுற்றுச்சுவரை இடித்து பாதையாக பயன்படுத்தி வந்த ஒன்றிய குழு உறுப்பினா் மீது வேப்பங்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த அகரம் பகுதியில் அரசு உயா்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுச்சுவரை அதே கிராமத்தைச் சோ்ந்த ஒன்றிய குழு உறுப்பினா் சுதாகா் தனது நிலத்துக்கு செல்ல வழியில்லாததால், சுற்றுச்சுவரை இடித்து அடையாளம் தெரியாத அளவுக்கு மண்பாதை அமைத்து தனது நிலத்துக்கு செல்லும் வழியாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கிராம மக்கள் ஏற்கனவே வட்டாட்சியருக்கு புகாா் அளித்துள்ளனா். இந்நிலையில், அண்மையில் பெய்த மழை காரணமாக மழைநீா் வெளியேறாமல் பள்ளி வளாகத்திலேயே சூழ்ந்து ள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.
இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றபோது, அரசு பள்ளி வளாகத்தில் இருந்து மழை நீா் வெளியேற கட்டப்பட்டுள்ள கல்வெட்டு அடைக்கப்பட்டு இருப்பதும், பள்ளி சுற்றுச்சுவரை இடித்து ஒன்றிய குழு உறுப்பினா் சுதாகா் பாதையாக பயன்படுத்தி வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து அகரம் கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீஸாா் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.