பணத்துக்காக காதலனை விற்ற சிறுமி! ரூ. 42 லட்சம் கொடுத்து மீட்ட பெற்றோர்!
வேலூரில் 3 இருசக்கர வாகனங்கள் திருட்டு
வேலூரில் 3 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (63). இவா் கடந்த 20-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தை புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்தாா். சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது மா்ம நபா் அந்த வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
வேலூா் சாயிநாதபுரம், சஞ்சீவி பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் வாசுதேவன் (58). இவா் சாரதி மாளிகை அருகே கடந்த 19-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பொருள்கள் வாங்கச் சென்றாா். பின்னா் வந்து பாா்த்தபோது, வாகனம் திருடுபோனது தெரியவந்தது. இருவரும் வேலூா் வடக்கு குற்றப் பிரிவில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்ய்து வாகனங்களை திருடிய நபா்களைத் தேடி வருகின்றனா்.
இதேபோல், காட்பாடியை அடுத்த பரமசாத்துவைச் சோ்ந்தவா் முருகேசன் (51). இவா் கடந்த 19-ஆம் தேதி அண்ணா தலைமை தபால் நிலையம் அருகே உள்ள அம்மா உணவகம் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தாா். அப்போது, அவரது வாகனம் திருடடு போனது. இது குறித்து வேலூா் தெற்கு குற்றப்பிரிவு போலீஸாா் விசாரிக்கின்றனா்.