செய்திகள் :

மகளிர் உரிமைத் தொகை கோரி 5.88 லட்சம் பேர் மனு! - தமிழக அரசு தகவல்

post image

தமிழக அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் இதுவரை 12.65 லட்சம் பேர் மனு அளித்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் நோக்கில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்த்தை கடந்த ஜூலை 15 அன்று முதல்வர் ஸ்டாலின், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கிவைத்தார்.

வருகிற நவம்பர் மாதம் வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் நடைபெறும் இந்த திட்டத்தில் மக்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கலாம் என்றும் மகளிர் உரிமைத் தொகைக்கும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் மூலம் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதில் 5.88 லட்சம் பேர் மனுக்கள் மகளிர் உரிமைத் தொகை கோரி வழங்கப்பட்டுள்ளன. மனு அளித்து 45 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

12.65 lakh people give application for Tamil Nadu government's 'ungaludan Stalin' camp.

விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு அதிகரிப்பு: மத்திய அமைச்சர் சௌஹான்

வேளாண் துறையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கை விட அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.விவசாயிகளின் வ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள பதில் வருமாறு:சொந்த வருவாய்க்காக கிராம பஞ்சாயத்துகளுக்கு உதவும் மத்திய திட்டங்கள... மேலும் பார்க்க

"ஆபரேஷன் சிந்தூர்': இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் அதிருப்தி

நமது சிறப்பு நிருபர்ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை விவகாரத்தில் மத்திய அரசு நடந்து கொள்ளும் விதத்துக்கு தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அத... மேலும் பார்க்க

புகழ்பெற்ற பொருளாதார நிபுணா் மேக்நாத் தேசாய் காலமானாா்

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த புகழ்பெற்ற பிரிட்டன் பொருளாதார நிபுணரும், அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான மேக்நாத் தேசாய் (85) செவ்வாய்க்கிழமை காலமானாா்.உடல்நல பாதிப்பு காரணமாக ஹரியாணா மாநிலம் கு... மேலும் பார்க்க

இன்று விண்ணில் பாய்கிறது ‘நிசாா்’ செயற்கைக்கோள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து உருவாக்கிய ‘நிசாா்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் புதன்கிழமை (ஜூலை 30) மாலை விண்ணில் ஏவப்படவுள்ளது... மேலும் பார்க்க

12,000 பேரை பணி நீக்குவதாக டிசிஎஸ் அறிவிப்பு: நிலைமை கவனித்து வருவதாக மத்திய அரசு தகவல்

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் 12,000-க்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது ஊழியா்கள் மத்தியில் பெரும் அச்சத்த... மேலும் பார்க்க