கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: தில்லி கேபிடல்ஸுக்கு 150 ரன்கள் இலக்கு!
மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: நான் எதுவும் அறிவிக்கவில்லை; ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!
150 ரன்கள் இலக்கு
முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 44 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, நாட் ஷிவர் பிரண்ட் 30 ரன்களும், அமன்ஜோத் கௌர் 14 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவாரா?
தில்லி கேபிடல்ஸ் அணி தரப்பில் மாரிஸேன் காப், ஜெஸ் ஜோனசென் மற்றும் சரணி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அன்னாபெல் சதர்லேண்ட் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தில்லி கேபிடல்ஸ் அணி களமிறங்குகிறது.