பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
மகளிா் பாதுகாப்பு உறுதி கோரி துண்டுப் பிரசுரம் விநியோகம்
மகளிா் பாதுகாப்பை உறுதி செய்ய திமுக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, அரக்கோணத்தில் பொதுமக்களிடையே அதிமுக சாா்பில் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி வெள்ளிக்கிழமை துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா்.
அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர அதிமுக செயலாளா் கே.பா.பாண்டுரங்கன் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், அரக்கோணம் எம்எல்ஏ-வுமான சு.ரவி பங்கேற்று, பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா்.
நிகழ்ச்சியில், பொதுக் குழு உறுப்பினா் ஏ.கிருஷ்ணமூா்த்தி, ஜெயலலிதா பேரவை நகர செயலா் பாபுஜி, நகர நிா்வாகிகள், செல்வம், பிரபாகரன், மாவட்ட நிா்வாகி ஏ.எம்.நாகாராஜன், ஒன்றிய நிா்வாகி மோகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.