செய்திகள் :

மகாராஷ்டிரா: ஏ.ஐ பயன்படுத்தி தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.3.2 மோசடி; பாஜக மேலவை உறுப்பினர் புகார்!

post image

ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்யப்படுவது நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இம்மோசடி மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.க்களையும் பாதிக்க ஆரம்பித்து இருக்கிறது. மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்கள், சட்டமேலவை உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படுகிறது. இதில் சட்டமேலவை உறுப்பினர்கள் எந்த தொகுதிக்கு வேண்டுமானாலும் செலவு செய்ய முடியும். ரத்னகிரி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பீட் மாவட்ட ஆட்சித்தலைவரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அக்கடிதத்தில் சட்டமேலவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3.2 கோடி பீட் மாவட்டத்திற்கு ஒதுக்கும்படியும், அந்த நிதியில் 36 திட்டங்களை செயல்படுத்தும்படி பா.ஜ.க சட்டமேலவை உறுப்பினர் பிரசாத் லாட் பரிந்துரை செய்து கடிதம் அனுப்பி இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அதோடு ரத்னகிரி மாவட்ட ஆட்சி தலைவருக்கு பிரசாத் லாட் போன் செய்தும் இது தொடர்பாக பேசினார்.

ஆனால் அக்கடிதம் மற்றும் போனில் சந்தேகம் அடைந்த ரத்னகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் இது குறித்து பிரசாத் லாட்டிற்கு போன் செய்து தனது சந்தேகத்தை கேட்டார். அப்போதுதான் அது போன்ற ஒரு கடிதம் தனது பெயரில் சென்று இருப்பது பிரசாத் லாட்டிற்கு தெரிய வந்தது. பிரசாத் லாட், தான் யாருக்கும் அது போன்று கடிதம் கொடுக்கவில்லை என்றும், போனில் பேசவில்லை என்றும் தெரிவித்தார். விசாரணையில் பிரசாத் லாட் பெயரில் வந்திருந்த பரிந்துரை கடிதம் போலி என்று தெரிய வந்தது. அதோடு யாரோ மர்ம நபர் ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பிரசாத் லாட் பெயரில் மாவட்ட திட்ட அதிகாரிக்கு போன் செய்து ஒரு குறிப்பிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படி கேட்டுக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

இப்பிரச்னையை பிரசாத் லாட் சட்டமேலவையில் எழுப்பினார். அவர், `எனக்கு தெரியாமல் எனது போலி லட்டர் பேடு மற்றும் என்னைப் போன்று பேசி எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து லாத்தூர் மாவட்டத்திற்கு ரூ.3.2 கோடி டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நிதி ஒதுக்கீட்டில் இருக்கும் குளறுபடிகள் சரி செய்யப்பட வேண்டும்' 'என்றார். சட்டமேலவை தலைவர் ராம் ஷிண்டேயும், இது போன்ற சம்பவங்களால் மற்ற எம்.எல்.ஏக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இரண்டு சட்டமேலவை உறுப்பினர்கள் இது தொடர்பாக புகார் செய்துள்ளனர். இது போன்ற மோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திருப்பூர்: ரிதன்யா தற்கொலை வழக்கு; `கணவர் குடும்பத்துக்கு ஜாமீன் வழங்க கூடாது'- நீதிமன்றத்தில் மனு

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரதட்சணை கொடுமை, கணவரின் உடல்ரீதியான சித்ரவதை தாங்க முடியாமல் ரிதன்யா என்ற இளம்பெண் காரில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது தொட... மேலும் பார்க்க

கடலூர்: `என் வீடு என் காதலிக்குத்தான்!’ - கறார் காட்டிய கணவரை கடப்பாரையால் குத்திக் கொலைசெய்த மனைவி

கடலூர் மாவட்டம், நெய்வேலி இந்திரா நகர் பி-2 மாற்றுக் குடியிருப்பைச் சேர்ந்த 62 வயது கொளஞ்சியப்பன், என்.எல்.சி-யில் ஊழியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திரா நகரில் உள்ள த... மேலும் பார்க்க

13 வயது சிறுவன் கடத்திக் கொலை; கிருஷ்ணகிரியில் பரபரப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்துள்ள மாவநட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் - மஞ்சு தம்பதியினரின் இளைய மகன் ரோகித் (13). இவர் நேற்று மாலை மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித... மேலும் பார்க்க

அஜித்குமார்: அரசு வேலை வாங்கித் தருவதாகப் பல பேரிடம் பல லட்சம் மோசடி; நிகிதா மீது குவியும் புகார்கள்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்தச் சம்பவத்திற்குக் காரணமான புகாரை அளித்த நிகிதா மீது கூறப்படும் மோசடி... மேலும் பார்க்க

நாமக்கல்: ஓய்வறையில் பெண் காவலர் மர்மமான முறையில் மரணம்; போலீஸ் தீவிர விசாரணை; பின்னணி என்ன?

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் காமாட்சி. இவர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.பணியை முடித்துக் கொண்டு நள்ளிரவ... மேலும் பார்க்க

'நான் தான் நீலகிரி கலெக்டர்'-போட்டோவோடு பலருக்கும் சென்ற வாட்ஸ் அப் மெசேஜ்... அதிர்ச்சி பின்னணி!

நீலகிரி மாவட்ட ஆட்சியராக லக்ஷ்மி பவ்யா தன்னீரு பதவி வகித்து வருகிறார். முந்தைய ஆட்சியர்கள் பயன்படுத்தி வந்த அரசின் சி.யூ.ஜி கைப்பேசி எண்ணினை அரசு அலுவலுக்காக இவரும் பயன்படுத்தி வருகிறார். ஆட்சியராக கை... மேலும் பார்க்க