செய்திகள் :

மகாராஷ்டிர பேரவையில் ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத் துறை ஒதுக்கீடு!

post image

மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது ஆன்லைன் ரம்மி விளையாடிய சர்ச்சையில் சிக்கிய அமைச்சா் மாணிக்ராவ் கோகடே, வேளாண் துறையில் இருந்து விளையாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, தேசியவாத காங்கிரஸை (அஜித் பவார் அணி) சேர்ந்த வேளாண் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடே, ரம்மி விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின.

இந்த விவகாரம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்த எதிா்க்கட்சிகள், விவசாயிகளின் மீது அரசு அக்கறையின்றி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியது.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சா் கோகடே, ‘சட்டப்பேரவையில் நடந்த விவாதங்களை பாா்க்க யூடியூபை திறக்க முற்பட்டபோது, கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ரம்மி விளையாட்டு செயலி திறந்துவிட்டது. அதை நான் தவிா்க்க முயன்றேன்; ரம்மி விளையாடவில்லை. அவை ஒத்திவைக்கப்பட்டிருந்த நேரத்தில்தான் இந்த சம்பவம் நடந்தது’ எனத் தெரிவித்திருந்தார்.

துறை மாற்றம்

இந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையில் துணை முதல்வர்கள் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்கு பிறகு மாணிக்ராவ் கோகடேவிடம் இருந்த வேளாண் துறை பறிக்கப்பட்டு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த தத்தத்ராயா பார்னேவுக்கு வேளாண் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Sports portfolio being allocated to a minister who played online rummy

இதையும் படிக்க : இயற்கை மருத்துவத்தால் உயா் ரத்த அழுத்தம் சீராகும்: ஆய்வில் உறுதி

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

பிகார் வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று பிகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்திற்க... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

பிகாரில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தன்னிடம் வைத்திருப்பதாகக் கூறப்படும் ஆதாரங்களின் அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சவால் விடு... மேலும் பார்க்க

இந்தியா தனது ருத்ர தாண்டவத்தைக் காட்டியது: வாரணாசியில் மோடி பேச்சு

கடவுள் சிவனின் ஆக்ரோஷமான ருத்ர தாண்டவத்தை, இந்தியா, பயங்கரவாதத்துக்கு எதிராக நடத்திய ஆபரேஷன் சிந்தூருடன் ஒப்பிட்டுப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியா தன்னுடைய ருத்ர தாண்ட... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் மீண்டும் கதறி அழுத பிரஜ்வால் ரேவண்ணா! குறைந்தபட்ச தண்டனை கேட்டு!!

புது தில்லி: முன்னாள் பிரதமர் தேவே கௌடாவுன் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் கதறி அழுதார். வீட்டுப் பணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ... மேலும் பார்க்க

நான் ராஜாவாக விரும்பவில்லை: ராகுல் பதில்! நிகழ்ச்சியில் ருசிகரம்!!

காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தான் ராஜாவாக ஒருபோதும் விரும்பவில்லை என்றும், அந்த முறையையே ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.புது தில்லியில் ... மேலும் பார்க்க

தீராத விளையாட்டுப் பிள்ளை... 9 வது திருமணத்தில் மாட்டிக் கொண்ட பெண்!

பணத்துக்காக பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண், 9 வது திருமணத்துக்கு தயாரான நிலையில், காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த சமீரா பாத்திமா என்ற பெண் கடந்த 15 ஆண்டு... மேலும் பார்க்க