செய்திகள் :

மகாராஷ்டிர ரயில் விபத்து: ராகுல் இரங்கல்!

post image

மகாராஷ்டிர ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் அவசரமாக கீழே இறங்கிய பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த புஷ்பக் விரைவு ரயிலின் பொதுப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால், சில பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினா். பின்னா், பெட்டியில் இருந்து அவசரமாக கீழே இறங்கி, அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்றிருந்தனா்.

இதையும் படிக்க | மகாராஷ்டிர ரயில் விபத்து: பலி 13-ஆக உயர்வு!

அப்போது, அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த பெங்களூரு-தில்லி இடையிலான கா்நாடக விரைவு ரயில், பயணிகள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 13 போ் உயிரிழந்தனா். சிலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரயில்வே தரப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1.5 லட்சம் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளாா். காயமடைந்தோருக்கான சிகிச்சை செலவை மாநில அரசே ஏற்கும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், மகாராஷ்டிர ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

'மகாராஷ்டிரத்தின் ஜல்கானில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் பலர் உயிரிழந்த, காயமடைந்த செய்தி மிகவும் வருத்தத்தையும், துயரத்தையும் அளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைப்பதை அரசும் நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.

நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் நிர்வாகத்திற்கு உதவுமாறு காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்.

தீ விபத்து பற்றிய வதந்தி எவ்வாறு பரவியது, இவ்வளவு பயங்கரமான விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விரைவான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது: ஓமர்

இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளதாக ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா தெரிவித்தார்.அமெரிக்க அதிபரின் டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்பு குறித்து ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்ல... மேலும் பார்க்க

தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு: ராகுல் பெருமிதம்

தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தொடங்கியதை தொல்லியல் துறை உறுதிப்படுத்தியுள்ளதை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புகழ்ந்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு... மேலும் பார்க்க

ஒற்றுமை, நல்லிணக்கத்தை எடுத்துச் சொல்லும் மகா கும்பமேளா: அமித் ஷா

மகா கும்பத்தை விட உலகில் வேறெந்த நிகழ்வும் நல்லிணக்கம் ஒற்றுமையின் சக்திவாய்ந்த செய்தியைத் தெரிவிக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார். குஜராத் பல்கலைக்கழக வளாகத்தில்... மேலும் பார்க்க

ஒரே மேடையில் சரத் பவார் - அஜித் பவார்! என்ன நடக்கிறது?

தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) கட்சியின் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரய துணை முதல்வரும் உறவினருமான அஜித் பவாருடன் ஒரு நிகழ்ச்சியில் ஒரே மேடையில் கலந்துகொண்டார்.வசந்த்ததா சர்க்கரை மையத்தில் இன்று நடைபெற்ற ... மேலும் பார்க்க

டீ விற்றவரின் வதந்தியே மகாராஷ்டிர ரயில் விபத்துக்குக் காரணம்: அஜித் பவார்

மகாராஷ்டிரத்தின் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் டீ விற்பவர் ஏற்படுத்திய வதந்தியின் விளைவுதான் இந்த ரயில் விபத்து என்று மகாரஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கூறியுள்ளார். லக்னெளவில் இருந்து மும்பை நோக்க... மேலும் பார்க்க

வாய்ஸ் கால், எஸ்எம்எஸ்-க்கு மட்டும் புதிய திட்டங்களை அறிவித்த ஜியோ, ஏர்டெல்!

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் டேட்டா இன்றி வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் வசதிக்கான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டேட்டாவுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களையே பயன்பாட்டில் ... மேலும் பார்க்க